மகாசிவ நாடி ஜோதிடம் வைத்தீஸ்வரன்கோயில்

16-September-2525

மகாசிவ நாடி ஜோதிடம் வைத்தீஸ்வரன்கோயில்

வணக்கம்.

வைத்தீஸ்வரன்கோயில் மகாசிவ நாடி ஜோதிட நிலையத்திலிருந்து முனைவர் ஆ.சிவசாமி பேசுகிறேன். மகாசிவ நாடி ஜோதிடம் தொடர்பான ஒரு சிறிய அறிமுகம் ஏனென்றால், நீங்கள் மகாசிவ நாடி பலன்களை தெரிய முன்வருகிறீர்கள். அதனால் இந்த செய்திகளோடு எங்களை தொடர்பு கொண்டால் செய்ய கூடிய காரியங்கள், செயல்கள் தெளிவாகவும், சிறப்பாகவும் அமையும் என்பதற்காக இந்த சிறிய முயற்சி. இந்த மகாசிவ நாடியை பற்றி சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

மகாசிவ நாடி ஜோதிடம் வைத்தீஸ்வரன்கோயில்

நாடி ஜோதிடம் – குருஜி முனைவர் டாக்டர் ஆ.சிவசாமி

மகாசிவ நாடி என்பது சிவபெருமானால் பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டு பிறகு பார்வதியால் பிரம்மாவிற்கு உபதேசிக்கப்பட்டு, பிறகு பிரம்மாவால் மகரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்டு பிறகு மகரிஷிகளால் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பலன்கள் உலக மக்கள் அவைருக்கும் எழுதப்படவில்லை. இந்த பலன்கள் எவறெவருக்கு எழுதப்பட்டு இருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக அந்த குறிப்பிட்ட காலத்தில் வந்து இந்த நாடி ஜோதிட பலன்களை தெரிந்து கொள்வார்கள் என்பது நிச்சயம். அப்படி இந்த மகாசிவ நாடி ஜோதிடம் என்பது பல ஆயிரங்கள், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு கடைசியாக தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரால் அதாவது 1800-க்கு பிறகு வந்த தஞ்சாவூர் சரபோஜி மன்னரால் மறுபதிவு செய்யபட்டிருக்கிறது. இந்த மறுபதிவு என்பது ஒவ்வொரு ஆட்சியாளருக்கு தகுந்தார் போல் அவர்களது விருப்பப்படி தொடக்கத்தில் வேறு மொழியாகவும், பிறகு ஒவ்வொரு மொழியாக கடந்து வந்து கடைசியாக தொடங்கிய மொழியிலேயே இது தமிழிலே புதுபிக்கப்பட்டது என்பதுதான் இதனுடைய சிறப்பு. ஏனென்றால், இதனுடைய தொடக்கம் தமிழிலேயேதான் தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்த தமிழ்மொழியிலேயே ஆர்வம் கொண்ட சரபோஜி மன்னர் இந்த மகாசிவ நாடி ஜோதிட பலன்களை உங்களுக்கு தமிழிலே மறுபதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த மகாசிவ நாடி ஜோதிடம் என்பது மக்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் இந்த வழிகாட்டுதலின் மூலமாக ஒவ்வொரு உயிர்களும் தங்களது இலக்கை தெரிந்து கொண்டு எந்தவித பேராசைகளும் இன்றி வாழ்ந்து முடித்து மறு பிறவியற்ற ஒரு நிலையை அடையவேண்டும் என்பதுதான் மகரிஷிகளுடைய விருப்பம். அந்த பொது நோக்கோடு எழுதப்பட்ட மகாசிவ நாடி ஜோதிடம் என்பது நீங்களும் தெரிந்து கொள்வதற்காக உங்களுடைய கை கட்டைவிரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும். ஆண் என்றால் வலது கையும், பெண் என்றால் இடது கையும் கட்டை விரலின் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட ரேகையில் ஒவ்வொரு ரேகைகளும் 108 விதமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ரேகைகளுக்கான ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. எங்களிடம் இருக்கின்ற ஓலைச் சுவடிகள் மூலமாக உங்களுடைய பலன்களை நீங்கள் நீங்களே தேடி கண்டுபிடித்து தெரிந்துகொள்ள வேண்டும். அந்த ஓலைகளை படிப்பதற்கு நாங்கள் உங்களுக்கு உதவியாக பாலமாக இருப்போம். எப்படியென்றால் இதுகாலம் வரை அந்த பாடல்களுக்கு விளக்கம் அறிவித்து விளக்கம் சொல்லி அழைக்கப்பட்டு பயின்ற எங்களால் இந்த பலன்கள் வந்து சேர்கிறது. அப்படி இந்த பலன்கள் உங்களுக்கு நிச்சயமாக ஒரு வழிகாட்டியாக அமையும்.

மகாசிவ நாடி ஜோதிடம் வைத்தீஸ்வரன்கோயில்

முதன்முதலாக உங்களுடைய உதவியோடு உங்களுடைய பொதுகாண்டம் தேடி எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஓலையாக படிக்க உண்டு இல்லை என்ற பதிலோடு உங்களது எல்லா விபரங்களும் ஒரே ஓலையில் ஒத்து வரும்போது அந்த ஓலையை தேடி எடுத்து அதில் உள்ள எதிர்கால பலன்களை உங்களுக்கு படித்து விளக்கம் சொல்லப்படுகிறது. அந்த பலன்கள் உங்களுடைய எதிர்காலத்தை பொதுவாக விளக்கமாக தந்துவிடும். அதன்பிறகு 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த 16 பிரிவுகளும் ஒவ்வொரு பலன்கள் அதாவது திருமணத்தைப் பற்றியும், தொழிலைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் இப்படி 16 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த பாவங்கள் செய்யப்பட்டு இருக்கிறது அந்த பாவங்களுக்கு நிவர்த்தி என்ன செய்யப்படவேண்டும் என்பதெல்லாம் நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி இந்த பலன்களை தெரிந்துகொள்வது நீங்கள் மட்டுமல்ல கி.மு.5ஆம் நூற்றாணடுகளில் வாழ்ந்த புத்தர் முதற்கொண்டு 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்பரிலிருந்து சென்று வென்று மறைந்து, மறைந்த பல தலைவர்கள் குறிப்பாக செல்வி.ஜெயலலிதா போன்ற பல தலைவர்களும் இந்த நாடி ஜோதிடத்தின் மூலமாக பலன் அடைந்து இருக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் மனிதர்களுடைய மனதில் எழக்கூடிய ஆசையாக இருக்கிறது. அப்படி இந்த மகாசிவ நாடி ஜோதிடம் உங்களை வழிநடத்துவதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் உங்ளுடைய இலக்கு, நீங்கள் எந்த இலக்கை தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கை சென்றடைவது எப்படி, அதற்கு நீங்கள் தகுதியானவர்கள்தானா, அந்த தகுதியை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விபரங்களை எல்லாம் இந்த மகாசிவ நாடியில் நீங்கள் பெற்று பயனடையலாம். இப்படி இந்த மகாசிவ நாடி ஜோதிடம் என்பது வைத்தீஸ்வரன்கோயிலில் எங்களால் வாசிக்கப்படுகிறது. எங்களுடைய குடும்பம் இது ஆறாவது தலைமுறையாக இந்த நாடி 250 -300 வருடங்களாக படிக்கப்படுகிறது. 

எங்களுடைய பாரம்பரியம் என்பது திருவள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்த பாரம்பரியமாக இந்த ஓலைச் சுவடியை அன்று சரபோஜி மன்னரிடம் அதாவது ஜோதிடம் சொல்லி வழிநடத்தி கொண்டிருந்த எங்களுடைய முன்னோர்களால் இந்த மகாசிவ நாடி ஓலைச் சுவடிகள் கையகப்படுத்தப்பட்டு பாரம்பரியமாக இந்த மகாசிவ நாடிஜோதிடம் வாசிக்கப்படுகிறது. இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் பல அறிய குறிப்புகள் விஞ்ஞானம் தொடர்பான, மருத்துவம் தொடர்பான, மந்திரம் தொடர்பான ஓலைகள் எல்லாம் கடந்த ஆட்சியாளர்களான பிரிட்டிஷ்காரர்களால் எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த விபரங்களும் செவிவழியாக தெரியவருகிறது. இப்படி இந்த மகாசிவநாடி ஜோதிடம் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு இப்போது பல நவீன தொழில்நுட்பான வாட்ஸ்அப் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும், வெப்சைட் மூலமாகவும் இப்படி பலவழிகளில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த பலன்களை நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நேரில் வருவது மிகச்சிறந்தது. அதோடு வர இயலாதவர்கள் இந்த பலன்களை ஆன்லைன் மூலமாக நீங்களே தெரிந்துகொள்ளலாம். இந்த மகாசிவ நாடி ஜோதிடம் என்பது பல வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. மகாசிவ துல்லிய நாடி, மகாசிவ சூட்சும நாடி, மகாசிவ அதிசூட்சும நாடி இப்படி பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு பிரிவுகளும் நுட்பமான பலன்களை விரிவான பலன்களை சொல்லக்கூடியவை. உங்களுக்கு எந்த தேவை இருக்கிறதோ, அந்த தேவையை உங்களுக்கு பணி செய்து உங்களை மகிழ்விக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இதற்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம் மட்டும் கொஞ்சம் மாறுபாடாக இருக்கும். அந்த மாறுபாடுகளையும், விபரங்களையும் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எங்களை கேட்டறியலாம்.

குறிப்பாக 04364 – 279463, 93633 37779 இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்களுடைய எதிர்கால பலன்களை தெரிந்துகொண்டு அந்த பலன்களை தெரிந்துகொள்வதன் மூலமாக உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். இப்படி இந்த ஓலைச்சுவடி மகாசிவ நாடி ஜோதிடம் வாசிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த மாதிரி ஜோதிடம் வியாபார ரீதியாக மாற்றப்பட்டு இந்த வைத்தீஸ்வரன்கோயிலில் செய்யப்படுகிறது. இந்த வைத்தீஸ்வரன்கோயிலில் வந்து இறங்கியதும் இங்கே வாருங்கள் நாங்கள் கட்டணம் குறைவாக செய்து தருகிறோம் இப்படி செய்து தருகிறோம் என்று வெளி ஊர்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி அவர்களுக்கு பெரிய தொல்லைகள் தருவதாகவும் கேள்விப்படுகிறோம். அதுகுறித்து வரக்கூடிவர்கள்தான் விழிப்போடு இருந்து அந்த துன்பங்களில் இருந்து தவிர்த்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்ல இந்த வைத்தீஸ்வரன்கோயில் என்பது செவ்வாய் க்ஷேத்திரம் சுவாமியின் பெயர் ஸ்ரீவைத்தியநாதசுவாமி, தாயார் பெயர் ஸ்ரீதையல்நாயகி, ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமி என்பது முருகனுடைய பெயராக விளங்குகிறது. இது பிரசித்தி பெற்ற செவ்வாய் ஸ்தலம். அங்காரஹனுடைய தோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடிய இந்த ஸ்தலத்திற்கும், எங்களுடைய நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பதிவின் மூலமாக நாடி ஜோதிடம் சம்பந்தமான விபரங்களை உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் எங்களை பற்றி, எங்களை பற்றியும் எங்களுடைய அனுபவங்களைப் பற்றியும் sivasamy arumugam என்ற Youtube சேனலிலும், www.srisivanadi.com என்ற இணையதளத்திலும் பல விபரங்களையும் நீங்கள் சேகரித்துக்கொள்ளலாம். அப்படி வருவதற்கு முன்பாக தொலைபேசி மூலமாக முன்அனுமதி பெற்றுவருவது சிறப்பைத்தரும். காலை 6.00 மணி தொடங்கி மாலை 6.00 வரை எமது நிறுவனம் நடைபெறுகிறது. அன்பர்கள் இந்த பதிவை முழுமையாக கேட்டறிந்து முழுதெளிவோடு எங்களை அணுகி நல்ல பலன்களை தெரிந்து தீய பலன்களை குறைத்துகொள்ள நல்லவழியை தெரிந்து கொண்டு நல்ல பலன்களை உயர்த்திகொள்ள வழியை தெரிந்து கொண்டு சிறப்படைய வாழ்த்துகிறேன்.

வணக்கம்.